போடு வெடிய.. பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "விக்ரம் HITLIST".. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ADMK பொள்ளாச்சி நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இதில் இந்தி மொழியில் 'விக்ரம் ஹிட்லிஸ்ட்' என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பான 'விக்ரம் ஹிட்லிஸ்ட்', வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு STAR GOLD தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடிக்கும் ‘JR30’.. அடுத்த அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Hitlist World Television Premiere on Star Gold

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.