இந்தியன் 2 படப்பிடிப்பில் கருணாநிதியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்த கமல்.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன்.

Advertising
>
Advertising

Also Read | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகளுடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த்!

ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது  நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின்   படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்." என கமல் பதிவிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதாக இருக்கும் கல்வெட்டு புகைப்படங்களை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | சூடுபிடிக்கும் வாரிசு படத்தின் UK டிக்கெட் முன்பதிவு.. வினியோகஸ்தர் தீபா ஐயர் EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Tweet from Indian 2 Shooting Netaji Karunanidhi

People looking for online information on Indian 2, Indian 2 Shooting, Indian 2 Shooting Netaji Karunanidhi, Kamal Haasan, Kamal Haasan Tweet will find this news story useful.