PATHAAN: பதான் படம் குறித்து ஷாருக்கானை வாழ்த்திய 'ஹேராம்' கமல்ஹாசன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் பதான் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | திடிரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற TTF வாசன்.. அவரே சொன்ன நோய்க்காரணம்.. VIDEO

இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இன்று ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் பதான் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "பதான் படம் குறித்து நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சாகேத் பதானை வாழ்த்துகிறார். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்" என கமல் ட்வீட் செய்துள்ளார்.

ஹேராம் படத்தில் கமல் சாகேத் ராம் எனும் கதாபாத்திரத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ட்ரீட் தரேன்..சம்பளம் எப்போ வரும்னு தெரியாது".. BIGGBOSS-க்கு பிறகு மைனா பகிர்ந்த வைரல் VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Tweet about Shahrukh Khan Pathaan Movie

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Tweet, Pathaan Movie, Pathan, Shah Rukh Khan will find this news story useful.