நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் பொறுத்தப்பட்ட டைட்டேனியம் கம்பியை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான அறிக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ல் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நடிகர் கமல்ஹாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது’.
‘அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசன் பிசியாக இருந்த காரணத்தினால் அதனை அகற்றும் பணி தள்ளிப்போனது’.
‘தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு வரும் நவ.22ம் தேதி அக்கம்பியை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சிகிச்சை முடிந்து அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்கு பின் கட்சியினரையும், சினிமா பணிகளையும் கமல்ஹாசன் தொடங்குவார்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.