அப்படி போடு.. விக்ரம் ஆல்பத்துல கமலுக்கு புடிச்ச பாட்டு இதான்.!.. அவரே சொன்ன பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் குறித்து கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “ரெண்டு நாளைக்கு No ஃபோன்… No இண்டர்நெட்”… என்ன சொல்றாரு A.R.ரஹ்மான் வைரலாகும் பதிவு

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன.

5 பாடல்கள் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. முதல் பாடலான 'பத்தல பத்தல' பாடல் மே 11 அன்று ரிலீசாகி ஹிட் அடித்தது. போர் கண்ட சிங்கம் & வேஸ்ட்ட் லிரிக் வீடியோ மே மாதம் 25 & 30 தேதிகளில் ரிலீஸ் ஆனது. ஒட்டுமொத்த பாடல்களும் ஆடியோ வடிவில் மே 15 ஆம் தேதி வெளியானது. விக்ரம் டைட்டில் டிராக் & Once Upon a Time பாடல்கள் மட்டும் லிரிக் வடிவில் வெளியாகாமல் உள்ளன.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் ஸ்பாடிபை நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் தனக்கு விக்ரம் படத்தின் ஆல்பத்தில் மிகவும் பிடித்த பாடலாக 'பத்தல பத்தல' பாடலை குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC  உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.  விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Also Read | தொழிலதிபருடன் நடிகை பூர்ணாவுக்கு 'டும் டும் டும்' .. ஃபோட்டோவுடன் வெளியான திருமண தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Talks about favourite song in Vikram Album

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Talks about favourite song, Vikram Movie will find this news story useful.