ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2".. உலக நாயகன் கமல்ஹாசன் கொடுத்த LATEST அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

Advertising
>
Advertising

Also Read | "விக்ரம் படத்தோட கதை 36 வருசத்துக்கு முன்ன யோசிச்சது".. மனம் திறந்த கமல்ஹாசன்! செம தகவல்

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனிடையே, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரவிவர்மன் இந்த படத்தில் இருந்து விலக, அவருக்கு பதில் ரத்னவேல் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ரத்னவேல் ஏற்கனவே ஷங்கரின் 'எந்திரன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் குறித்து விக்ரம் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கமல் ஹாசனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த கமல், "இந்தியன்-2 சிறந்த இடத்தை பெறும் என்றும், இந்தியன் -2 படத்தின் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்" கமல் பதிலளித்தார்.

Also Read | கடற்கரையில் பிகினியில் கலக்கிய அமலாபால்.. Trend ஆகும் மிரட்டலான புதிய ஃபோட்டோஸ்

ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2".. உலக நாயகன் கமல்ஹாசன் கொடுத்த LATEST அப்டேட்! FANS HAPPY அண்ணாச்சி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Talked about Indian 2 Movie at Vikram Press meet

People looking for online information on Indian 2 Movie, Indian 2 Movie Updates, Kamal Haasan, Shankar, Vikram Press meet will find this news story useful.