ரீ ரிலீஸாகும் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்'.. உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகளின் 20-வது பிறந்தநாள்.. வெகுவிமரிசையாக கொண்டாடிய குஷ்பு & சுந்தர் சி.. வைரல் போட்டோஸ்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஷங்கர்- இஷன்- லாய் கூட்டணியின் இசையில் வெளியான இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Image Credit : Twitter

இந்த படத்தில் இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட நந்த குமார் & ராணுவ வீரர் விஜய் குமார் என்ற இரண்டு கதாபாத்திரத்தில்  கமல் நடித்திருந்தார். ரவீனா , மனிஷா கொய்ராலா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். 2001 தீபாவளிக்கு இந்தியில் அபய் என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Image Credit : Twitter

சிறந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக இந்த படம் தேசிய விருதை வென்றது. மேலும் சிறந்த படத்தொகுப்பிற்கு மாநில அரசு விருதையும் ஆளவந்தான் திரைப்படம் வென்றது.

Image Credit : Twitter

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Also Read | ஸ்வீட் எடுங்க 😍 தாய் மாமாவான சிம்பு.. தங்கை இலக்கியா பகிர்ந்த குட் நியூஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Starring Aalavandhan Re Release with 1000 Screens

People looking for online information on Aalavandhan, Aalavandhan Re Release, Kamal Haasan will find this news story useful.