KAMAL HAASAN : "இருமல்தான்.. ஆனா பெரிய நியூஸானதுக்கு இதான் காரணம்.. " .. உற்சாகமாக பேசிய கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் கமல்ஹாசன் தம்முடைய ஆறாவது வயதில் நடிக்க தொடங்கி 230 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

திரைப்படங்கள் நடிப்பது, இயக்குவது, கதை- வசனம்- பாடல்கள் எழுதுவது ,  பாடல் பாடுவது, திரைப்படங்களை தயாரிப்பது உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி பிக் பாஸ் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தம்முடைய 68வது பிறந்த நாளை சமீபத்தில் தான், நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தம்முடைய 234வது திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கக்கூடிய தகவல் அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியானது. இதனிடையே கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2-ஆம் பாகம் தயாராகி வருகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் பெருவெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர், உதவி இயக்குனர்கள், திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை கமல் வழங்கி இருந்தார்.

இந்த சூழலில்தான்,  நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை அடுத்து இவைகுறித்த உண்மை தகவல்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நவம்பர் 23-ஆம் தேதி லேசான காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்டவற்றுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் தேடி வருகிறார் என்றும், ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பிலான டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன்,  “சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காக வந்திருக்கிறேன். டிரைலர் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நான் நலமாகவே இருக்கிறேன். இருமல்தான் வேறொன்றுமில்லை. முந்தியெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து என்னை பார்த்தால் அடுத்த எப்போ படம் ரிலீஸ்? எப்போ ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது இருமல் தான். மிகப்பெரிய செய்திகள் எல்லாம் எனக்கு வருகிறது. இதற்கு காரணம் ஒன்று ஊடகம், இன்னொன்று பெருகி இருக்கும் அன்பு என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். 

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46 வது படமாக உருவாகியுள்ள DSP படத்தில், விஜய் சேதுபதி, திண்டுக்கல் மாவட்ட DSP-ஆன  வாஸ்கோடகாமா என்கிற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி நடிக்கிறார். மேலும் CWC புகழ், ஞான சம்பந்தம், இளவரசு, சிங்கம் புலி ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Speech after discharge DSP Audio launch

People looking for online information on DSP Audio Launch, DSP Trailer, Kamal Haasan, Vijay Sethupathi will find this news story useful.