"இந்த குற்ற உணர்வுலதான் HEY RAM எடுத்தேன்".. "22 வருஷத்துக்கு முன் வந்த பயம்".. கமல் பரபரப்பு பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஹே ராம்' படம் எடுத்ததற்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்து கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவில் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார். கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார்.

கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்‌. அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மேலும் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' கட்சி  சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 'நானும் தலைவன் நீயும் தலைவன்' எனும் நிகழ்வில் கட்சித் தொண்டர்கள் முன் உரையாற்றினார். "போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்" என்ற பதாகையின் முன் நின்று கமல்ஹாசன் உரையாற்றினார். இந்த உரையில் பல விடயங்கள் குறித்து குறிப்பாக அரசியல், வரலாறு, மானுடவியல், மதம், சினிமா, திராவிட இயக்கத்தில் சினிமா, பௌத்தம், காந்தியம் குறித்து பேசினார்.

இந்த விழாவில் ஹே ராம் படம் குறித்தும் கமல் பேசினார். தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் மிக முக்கிய படைப்பு ஹே ராம். காந்தியிசத்தை அடிப்படையாக கொண்டு வரலாற்று புனைவை இயக்குனர் கமல் ஹே ராமில் அமைத்திருப்பார். இந்த படத்தின் கலை இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கமாக ஹே ராம் படத்தை கமல் படைத்திருப்பார்.

இது தமிழ் படமல்ல... இந்தியப்படம் என சொல்லியே கமல் இந்த ஹே ராம் படத்தை வெளியிட்டார். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, அதுல் குல்கர்னி, ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வசுந்தரா தாஸ் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹேராம், அந்த ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், " என் அப்பா சொல்லிக்கொடுத்து காந்தி எனும் வார்த்தை என்னுடைய நாவில் வரவில்லை. எல்லோரையும்போல ஒருமையில் பேசக்கூடிய அறிவிலியாகத்தான் நானும் இருந்தேன். அவரா வாங்கிக்கொடுத்தாரு சுதந்திரம்? மீதிப்பேர் எல்லாம் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க என சவுகரியமாக கேட்க முடியும். ஆனால், நான் வாங்கிக்கொடுத்தேன் என அவர் எங்கேயுமே சொல்லவில்லை.

ஒவ்வொருவருமே சத்தியாகிரகியாக வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அப்படி நிகழ்ந்தது தான் இந்த சுதந்திர போராட்டம். ஆனால், அந்த காந்தியார் எதெதெல்லாம் நடக்க கூடாது என்று பயந்துகொண்டு இருந்தாரோ அவையெல்லாம் 75 ஆண்டுகளில் அரங்கேற்றி இருக்கிறோம் நாம். அதற்கு மாற்றாக சட்டையை திறந்துகொண்டு கவசமில்லாமல் களமிறங்கி இருக்கிறேன் நான். நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டும்" என்றார்.

மேலும் ஹே ராம் படம் குறித்து பேசிய கமல்ஹாசன், "நான் 'ஹே ராம்' என்ற படம் எடுக்க காரணமே எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்வு. இவ்வளவு உழைத்து இதை ஒரு நாடாக திருத்தி செதுக்கி கொடுத்ததை நமக்கு வைத்திருக்க தெரியலையே என்ற வருத்தம். இப்படியெல்லாம் நிகழும் என்ற பயம் காந்திக்கு பிறகு தான் எனக்கு வந்தது என்றாலும் வந்துவிட்டது. 22 வருடங்களுக்கு முன் வந்த பயத்தின் விளைவு தான் 'ஹே ராம்'. 'ஹே ராம்' படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது" என கமல்ஹாசன் பேசினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Speech about Hey Ram Movie and Mahatma Gandhi

People looking for online information on Hey ram, Kamal Haasan will find this news story useful.