ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2.. வைரலாகும் படத்தின் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மூன்று பிரபல கதாநாயகிகளுடன்.. 3 வேடங்களில் அசோக் செல்வன்.. வெளியான புது படத்தின் ROMANTIC டீஸர்!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் பிரபல தலையலங்கார கலைஞர் அம்ரிதா ராம் எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | முதல்முறையாக மூக்குத்தி குத்திய நடிகை கனிகா.. அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Shankar Indian 2 Movie Shooting BTS Image

People looking for online information on Indian 2 Movie, Indian 2 Movie Shooting Updates, Kamal Haasan, Shankar will find this news story useful.