"நாயகன்ல பிளேடு வெச்சு ஷேவ் பண்ல.. தலைமுடிய பிடுங்கினோம்!".. SACRIFICE குறித்து BIGG BOSS -ல் பேசிய கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து வருவது பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

முன்னதாக கடந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறி இருந்தார். இதற்கு மத்தியில்,   Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் முக்கியம் என்பதால் அனைவரும் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ்களால் கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸ்க்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடின டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல ஹவுஸ்மேட்ஸ் பிக் பாஸாக மாறியும் செயல்பட்டு வருகின்றனர்.

இத ஒரு அம்சமாக தலைமுடி, மீசை, தாடி உள்ளிட்டவற்றை ஒழுங்கில்லாமல் ஷவரம் செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. அத்துடன் விருப்பம் இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டாம் என சொல்லப்பட்டாலும், இதுபோன்று சுயமரியாதை குறைவான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்ததே இல்லை, கொடுக்கவும் மாட்டார் என கமல் முன்னிலையில் இந்த வார இறுதியில் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கருத்துகக்ளை கூறினர்.

அப்போது இதுகுறித்து பேசிய கமல், “நான் வேலு நாயக்கர் கேரக்டருக்காக தலைமுடியை ஷேவ் செய்தால் அப்பட்டமாக தெரியும் என்று உச்சி தலையில் இருக்கும் முடியை பிடுங்கி எடுத்தோம். மேலிருந்து ஷாட் காண்பித்தால் அது கொஞ்சமாக சொட்டை போல தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி வழவழவென மாற்றினேன். உடம்பை எல்லாம் புண்ணாக்கி இருக்கிறேன். கோவணம் கட்டி இருக்கிறேன். தியாகம் என்பது விரும்பி செய்வது, அதை நான் கடமையாக நினைத்து செய்தேன். அதற்கு சம்பளமும் கிடைத்தது. மக்களிடம் பாராட்டும் கிடைத்தது. இதைத்தான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய கமல், “தியாகம் என்பது விரும்பி செய்வது, வலியுறுத்தக் கூடாது, அது வன்மம்” என்றும் தெரிவித்தார். அத்துடன், “நான் உங்களை எல்லாம் வெற்றி நாயகர்களாக பார்க்க வேண்டும் என்பதற்காக தான் இவற்றையெல்லாம் சொல்லி உங்களை டெவலப் செய்ய விரும்புகிறேன். இல்லை நான் கோமாளியாக இருப்பேன் என்றால் இருங்கள். அது உங்கள் இஷ்டம்” என்று கூறினார்.

Kamal haasan on Sacrifice reveals nayagan backs story bigg boss

People looking for online information on Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.