புது ஹேர்ஸ்டைலில் முறுக்கு மீசையுடன் கமல்.. இந்தியன் - 2 படத்தின் STYLIST பகிர்ந்த BTS PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் TV ஒளிபரப்பு உரிமம்.. கைப்பற்றிய முன்னணி தமிழ் சேனல்! போடு வெடிய

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மீண்டும் துவங்கியது. தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் அம்ரிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் புதிய தலையலங்காரத்தில் முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார். ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தினை தயாரித்து வருகிறது.

 

Also Read | கேரளாவில் மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.. வேற மாரியான சம்பவம் இது!

 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan New Hairstyle for Indian 2 Movie BTS

People looking for online information on Indian 2, Kamal Haasan, Kamal Haasan New Hairstyle will find this news story useful.