கமல்ஹாசன் - விஜய் சேதுபதி சந்திப்பு காரணம் என்ன? விக்ரம் பட அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் "விக்ரம்" படத்தின் பூர்வாங்க பணிகள் நடைப்பெற்று வந்தன. அதனை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

படத்தில் பங்கு பெறும் CAST & CREWவை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்ட படக்குழுவினர். தற்பொழுது "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர்.

முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இனி வரவிருக்கும் நாட்களில் படமாக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசனுடன் இணைந்து மகேந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தேசிய விருதுப்பெற்ற மலையாள ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். "கைதி" படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைத்த இரட்டையர்கள் அன்பறிவு சகோதரர்கள், இந்த படத்திற்க்கும் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal haasan meets vijay sethupathi for vikram movie

People looking for online information on Anirudh Ravichander, Kaithi Tamil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Master Tamil, Vijay Sethupathi, Vikram will find this news story useful.