கமல்ஹாசன் இலங்கை துணை உயர் ஆணையரை சந்தித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | பாரதியார் கெட்-அப்பில் தனுஷ்.. அசரவைக்கும் 'வாத்தி' படத்தின் டீசர்!
கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன், இலங்கை தூதரக துணை உயர் ஆணையரரான துரைசாமி வெங்கடேஸ்வரனை சந்தித்து அங்குள்ள பிரதிநிதிகளுடன் உரையாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான முகநூல் பதிவில் நிகழ்ச்சி அமைப்பாளர் அஜித் ஜேசுதாசன் இத்தகவலை துரைசாமி வெங்கடேஸ்வரனை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதில் "தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான 'பத்ம பூஷன்' கமல்ஹாசன், துணை உயர் ஆணையர் டாக்டர் டி. வெங்கடேஷ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில், மிஷனின் வரலாற்றில் முதல் முறையாக 24.07. 2022 அனறு சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தந்தார்.
இந்த விஜயத்தில், பிரதி உயர்ஸ்தானிகருடன் திரு.கமல்ஹாசன் கலந்துரையாடினார், அங்கு அவர்கள் இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடினார். பிரதி உயர்ஸ்தானிகர் தனது உரையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திரையுலகக் குழு மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் திரு.கமல்ஹாசன் இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், திரு.கமல் ஹாசன் தனது நலன்புரிச்சங்கத்தின் ஊடாக ‘இலங்கைக்கான ஆதரவிற்கு' தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
கலந்துரையாடலுக்குப் பிறகு, கமல்ஹாசன் மிஷனின் அனைத்து ஊழியர்களுடனும் நட்பு ரீதியாக உரையாடினார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | செஸ் ஒலிம்பியாடுக்காக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ!