கமல்ஹாசனை சந்தித்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்.. இணையத்தில் டிரெண்டாகும்‌ கமலின் LATEST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனை பிரபல முன்னணி போடு ஐசரி கணேஷ் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | COBRA-க்கு சொந்த குரலில் டப்பிங் பேசினாரா இர்பான் பதான்? அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக ஐசரி கணேஷ், கமல்ஹாசனை நேரில் சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது தமிழகம் திரும்பிய அவர் செப்டம்பர் மாதம் முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.‌ இச்சூழலில் கமல்ஹாசனின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | வெளிநாட்டில் செம லுக்கில் பாலகிருஷ்ணா & ஸ்ருதிஹாசன்! வைரலாகும் புதிய படத்தின் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan meet Venthu Thaninthathu Kaadu Producer

People looking for online information on Kamal Haasan, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu Producer will find this news story useful.