திருப்பதியில் கமல்ஹாசனை காண திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் இந்தியன்-2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

Kamal Haasan Meet His Fans at Tirupati Indian 2 Shooting
Advertising
>
Advertising

Also Read | சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது பெறும் நடிகை ஜோதிகா? வெளியான தகவல்

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார். ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் கமல்ஹாசனை சந்திக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர். திரண்ட ரசிகர்களை காண கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு நடுவே வந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | மனைவியுடன் ஏர்போர்ட்டில் G.V. பிரகாஷ்.. வரவேற்ற பிரபல தமிழ் தயாரிப்பாளர்! இதுக்கு தானா?

திருப்பதியில் கமல்ஹாசனை காண திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் இந்தியன்-2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Meet His Fans at Tirupati Indian 2 Shooting

People looking for online information on Indian 2, Indian 2 Shooting, Kamal Haasan, Kamal Haasan Meet His, Shankar, Tirupati will find this news story useful.