கமல் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தில் இருந்து 'பத்தல பத்தல' எனும் குத்துப்பாடல் ரிலீசாகி உள்ளது.
விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகியுள்ளது. 6.30 மணிக்கே ஐ டியூன்ஸில் இந்த பாடல் வெளியாகி விட்டது. பின்னர் லிரிக் வீடியோ வடிவில் யூ டியூப்பில் வெளியாகி உள்ளது. 'பத்தல பத்தல' என தொடங்கும் இந்த பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். சென்னை வட்டார மொழியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
"கஜானாலே காசில்லே..கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என்ற பாடல் வரிகள் பாட்டில் இடம் பெற்றுள்ளன. கமலுக்கு சென்னைத் தமிழ் புதிதல்ல, கமலின் பல படங்களில் சென்னைத் தமிழ் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அபூர்வ சகோதரர்கள்
சென்னை தமிழில் மனோரமாவும், கமல்ஹாசனும் இணைந்து பாடிய "ராஜா கைய வச்சா" பாடல் செம்ம ஹிட்டானது. இளையராஜா இசையில், கவிஞர் வாலி வரிகளில் இந்த ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனது. அதே போல "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ" பாடலில் ஆரம்ப வரிகள் சென்னை தமிழில் அமைந்தன.
காதலா காதலா
அதே கமல் - வாலி கூட்டணியில் அடுத்த சென்னை வட்டார மொழி பாடலாக அமைந்தது, "காசு மேலே காசு வந்து" பாடல். கார்த்திக் ராஜா இசையில் கமல் ஹாசன், உதித் நாராயணன் இணைந்து இந்த பாடலை பாடியிருப்பர். "காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது" - இதில் ராஜலெட்சுமி கமலின் தாயாரை குறிக்க கவிஞர் வாலி பயன்படுத்தியது. இதே போல கமலின் தாயாரையும் (ராஜலெட்சுமி), கமலின் தந்தையாரையும் (ஸ்ரீனிவாசன்) குறிக்க தசாவதாரம் படத்தில் 'ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்" எனும் பாடல் வரியை கவிஞர் வாலி பயன்படுத்தியிருப்பார்.
பம்மல் கே சம்பந்தம்
இம்முறை சென்னைத் தமிழில் கமல்ஹாசனே பாடல் எழுதி பாடிய "கந்தசாமி மாடசாமி குப்புசாமி ராமசாமி கல்யாணம் கட்டிக்கினாங்கோ" பாடல் மட்டுமல்லாமல், படம் முழுவதும் சென்னை தமிழில் பேசி கமல் நடித்திருப்பார். நடிகர் இயக்குனர் மௌலி இந்த படத்தை இயக்கி இருந்தார்.
வசூல் ராஜா MBBS
சென்னை தமிழில் கமல் முழுக்க பேசி நடித்த கடைசி திரைப்படம், வசூல் ராஜா MBBS. இயக்குனர் சரண் இயக்கிய இந்த படத்தில், சரணின் ஆஸ்தான பாடலாசிரியர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதினார். பரத்வாஜ் இசையமைத்தார். "கலக்க போவது யாரு" பாடல் ஒபனிங் பாடலாக இருந்தாலும், "ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா" பாடல் முழுக்க சென்னைத் தமிழில் அமைந்து சூப்பர் ஹிட் ஆனது. மொத்த ஆல்பமும் தாறுமாறாக ஹிட் அடித்தது.
இந்த பாடல்களின் வரிசையில் தற்போது "பத்தல பத்தல" பாடலும் இணைந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/