VIKRAM: லோகேஷ் கனகராஜ் போட்ட டிவீட்.. உச்ச சந்தோஷத்தில் கமல் ரசிகர்கள்! விக்ரம் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய போஸ்டரும், அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதனை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக கமலுடன் தான் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார். மேலும் விக்ரம் படம் 2022  கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி திங்கள் அன்று (14.03.2022) காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறி, விக்ரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie Pan India Release

People looking for online information on Fahad Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.