7 ஆண்டுக்கு பின் 'விக்ரம்' படத்தில் கமல் குத்து டான்ஸ்.. வெளிவந்த மாஸ் போஸ்டர்! ஆண்டவர் ஆட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் புதிய LOOK போஸ்டர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பிசாசு -2 படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தாரா ஆண்ட்ரியா? பூர்ணா Exclusive

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனை புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. கமல் குத்து டான்ஸ் ஆடும் ஸ்டில் போஸ்டரில் சிவப்பு நிற பின்னணியில் அமைந்துள்ளது. 'பத்தல பத்தல' என தொடங்கும் இந்த பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இதற்க்கான இறுதி ஒலிப்பதிவு சில தினங்களுக்கு முன் அனிருத் ஸ்டூடியோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுக்கு பின் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்காக நடனம் ஆடியுள்ளார். கடைசியாக உத்தம வில்லன் படத்தில் "சிங்கிள் கிஸ்கே லவ்வா" பாடலில் நடனம் ஆடி இருந்தார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

7 ஆண்டுக்கு பின் 'விக்ரம்' படத்தில் கமல் குத்து டான்ஸ்.. வெளிவந்த மாஸ் போஸ்டர்! ஆண்டவர் ஆட்டம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie New Poster Released

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram Movie new Poster updates will find this news story useful.