ரசிகர்களை கவரும் கமல்ஹாசனின் போட்டோஷூட்.. காஸ்டியூம்ல இந்த ஸ்பெஷல் விஷயம் வேற இருக்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசனின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார். மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றைத் துவக்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். KH - House of Khaddar என தன் நிறுவனத்தின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்றபோது இந்த எண்ணம் தோன்றியதாகவும் கமல் கூறினார்.

தனது KH - House of Khaddar நிறுவனத்திற்காக கமல் பிரத்யேக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  டெனிம் & கதர் உடைகளை இணைத்து உருவாக்கிய உடைகளை அணிந்து கமல்ஹாசன் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஏற்கனவே KH - House of Khaddar டெனிம் & கதர் உடை அணிந்து ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே போட்டோ ஷூட் நடத்தியது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Latest Photoshoot for KH House of Khaddar

People looking for online information on Denim, Kamal Haasan, Kh house of khaddar will find this news story useful.