PHOTOS: பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2.. படத்தில் இணைந்த பிரபல டாப் ஒளிப்பதிவாளர்! இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் புகைப்படங்கள் மற்றும் போஸ்டருடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போ? இயக்குனர் ஷங்கர் சொன்ன அதிரடி அப்டேட்!

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்.

ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி உள்ளது. இதற்கான பிரத்யேக பூஜை சென்னையில் நடந்தது.‌இதில் இயக்குனர் ஷங்கர், கலை இயக்குனர் முத்து ராஜ், நடிகர்கள் ஜெய் பிரகாஷ், பாபி சிம்ஹா, லைக்கா நிறுவன அதிகாரி தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் ரவி வர்மன் ISC மீண்டும் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் ரவி வர்மன் ISC ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் எந்திரன் புகழ் ரத்னவேலு ISC ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இந்நிலையில் ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். ரவி வர்மன் ISC தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.‌

Also Read | "ஒரு கதை சொல்லட்டுமா சார்".. 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் கொல மாஸ் டீசர்! தனன நனனனா

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Indian 2 Cinematographer Ravi Varman ISC

People looking for online information on Indian 2, Indian 2 Cinematographer, Indian 2 Cinematographer Ravi Varman, Kamal Haasan will find this news story useful.