லோகேஷ் கனகராஜூக்கு கமல்ஹாசன் பரிசளித்த காரின் முழு புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Also Read | கார்த்தி நடிக்கும் அடுத்த பட டைரக்டர் இவரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்.. இது செம Combo!
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.
இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.
இந்த லெக்ஸஸ் கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் ES300 H செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இந்த வகை கார்கள் பெட்ரோல் & மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் வகை கார்கள் ஆகும்.
இந்நிலையில் இந்த காருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை பிரபல கார் சர்வீஸ் நிறுவனமான ஓசோன் டீடெய்லிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Also Read | கார்த்தி நடிக்கும் அடுத்த பட டைரக்டர் இவரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்.. இது செம Combo!