தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
Also Read | Bigg Boss வரலாறுலயே இப்டி ஒரு Elimination நடந்ததில்ல.. பரபரப்பை ஏற்படுத்திய கடைசி நேர ட்விஸ்ட்..!!
விறுவிறுப்பு நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களும் இதனை அதிகம் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக ஜிபி முத்து வெளியேறி இருந்தார். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஜிபி முத்து இந்த முடிவை எடுத்து தானாக வெளியே போனார். இதனைத் தொடர்ந்து, சாந்தியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தொடர்ந்து அடுத்த வாரத்தில் அசல் கோலார் வெளியேறி இருந்தார். இதன் பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் போட்டியாளர் ஷெரினா எலிமினேட் ஆகி இருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் மலையாள மொழி பேசப்பட்டு வந்தது குறித்து கமல் கொந்தளித்து பேசிய விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருவதால் அனைவரும் தமிழ் மொழியில் தான் பேச வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடப்பு சீசனில் ஷெரினா மற்றும் ஆயிஷா ஆகியோர், சில சமயங்களில் மலையாள மொழிகளில் மாறி மாறி பேசி இருந்தனர். இதனை பிக்பாஸும் எச்சரித்திருந்தார். தொடர்ந்து, கமல்ஹாசன் கூட கடந்த வாரம் வேறு மொழிகள் பேசுவது பற்றி எச்சரிக்கை ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.
ஷெரினா எலிமினேட் செய்யப்பட்ட போது, அதற்கான கார்டை காண்பித்த கமல்ஹாசன், அதில் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் இருப்பதை காட்டினார். இதன் பின்னர், மீண்டும் ஷெரினாவின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருக்கும் கார்டை கமல்ஹாசன் காண்பித்தார். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வேறு மொழியில் Elimination அட்டை காட்டப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல முறை எச்சரித்த பிறகும் ஷெரினா அதனை பின்பற்றவில்லை என்பதால் அப்படி ஒரு எலிமினேஷன் கார்டு காட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் மொழி விவகாரம் குறித்து ஆவேசமாக சில விஷயங்களை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருந்தார்.
"இது மலையாள பிக்பாஸ் ஆக மாறிக் கொண்டு வருகிறது. நான் டபுள் சம்பளம் கேட்கலாம் என இருக்கிறேன். எனக்கு மொழிகள் பிடிக்கும். மலையாள படங்களிலும் நான் ஹீரோவாக நடித்துள்ளேன். என்னையே மலையாளி என சிலர் நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால், அந்தந்த சூழலுக்கு ஏற்றது போல நடந்து கொள்ள வேண்டும்.
என் மொழி அப்படி தான் பேசுவேன் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தி திணிப்பிற்கு எதிரானவன் நான். ஆனால் இந்தி பாடல்களின் ரசிகன் நான். திலீப் குமாரின் பரம ரசிகன். அங்குள்ள நடிகர்களையும் பிடிக்கும். அது வேறு, இது வேறு. உரிமைகள் வேறு, கடமைகள் வேறு. உங்கள் கடமையில் இருந்து மீற வேண்டாம். இந்த வாய்ப்பையும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என பகிரங்க வார்னிங் ஒன்றையும் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்துள்ளார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை சரிவர போட்டியாளர்கள் பின்பற்றாமல் இருப்பது குறித்தும் சில கருத்துக்களை கமல்ஹாசன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | 'ரஞ்சிதமே' ஹிட்டை தொடர்ந்து, 'வாரிசு' படப்பணி குறித்த செம்ம அப்டேட்!!