"விக்ரமன், அசிம் பேசும்போதே இதெல்லாம் சொல்லிருக்கணும்!".. அசல் சொன்னது என்ன? BIGG BOSS 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்.. ஹவுஸ்மேட்சை நெகிழ வச்ச வீடியோ.. இன்றைய பிக்பாஸில்..!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்காக கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டடியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கமலஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி இருந்தார். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். போட்டியாளர்களிடையே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான அசத்தல் பதில்களையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன்.

அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் சமயத்தில், வெளியேறி தற்போது என்ட்ரி கொடுத்துள்ள போட்டியாளர்களிடம் நீங்கள் எந்த நேரத்தில் உள்ளே இருந்திருக்க வேண்டும் என்றும் எந்த நேரத்தில் நீங்கள் இல்லாமல் போனோம் என்றும் நினைக்கும் தருணம் பற்றி அனைவரிடமும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போது இந்த கேள்விக்கு பதிலளித்த அசல் கோலார், "நிறைய இடத்துல விக்ரமனும், அசிமும் பேசுறப்போ ஹேய் இந்த பாய்ண்ட்-ட சொல்லி இருக்கலாமே, இந்த பாய்ண்ட்ட சொன்னா அவரு அமைதியா இருந்துருப்பாரே அப்படின்னு தோணுச்சு. அது நிறைய இடத்துல தோணிட்டு இருந்தது" என கூறிய பின்னர், ADK பற்றி அசல் கோலார் பேச முற்பட்டார்.

அந்த சமயத்தில் பேசிய கமல்ஹாசன், "அதாவது வெளிய இருக்குற பலருக்கும் அந்த மாதிரி எல்லாம் தோணும். அங்க (பிக் பாஸ் வீட்டிற்குள்) இருக்கும் போது வராது" என கூறியதும் சக ஹவுஸ்மேட்ஸ் கைத்தட்டி ஆரவாரம் செய்திருந்தனர். இதற்கடுத்து பேசும் அசல் கோலார், "உள்ள இருந்து பார்த்துட்டு போனதுனால இவங்க பேசி இருந்தா எல்லாம் மாறி இருக்கும்ன்னு தோணுச்சு. நல்ல வேளை இல்லாம போய்ட்டோமேன்னு எந்த இடத்துலயும் தோணல" என கூறினார்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்திற்கு முன்பு ADK வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இப்டி உங்கள அனுப்ப மனசில்ல".. ADK -வுக்கு கமல் கொடுத்த Gift... மனம் உருகிய பார்வையாளர்கள்!!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan fun reply to asal kolaar after his speech bigg boss

People looking for online information on Asal kolaar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay Television, Vijay tv will find this news story useful.