150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பத்மஸ்ரீ மற்றும் சின்ன கலைவாணரும் நகைச்சுவை நடிகருமான விவேக் சென்னை வடபழனி மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது இழப்பு ஒட்டுமொத்த திரை உலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கமல் அவரது இரங்கல் செய்தியில் கூறியதாவது: "நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு."
விவேக், வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி, இன்று (17.4.21) அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
Tags : Vivekh, Kamal Haasan