"என் மாஸ்டருக்கு சல்யூட்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. கமல்ஹாசன் உருக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உங்களால் என் குழந்தை பருவம்".. இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு A.R. ரஹ்மான் இரங்கல்!

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படங்களாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமான அஞ்சலி குறிப்பு ஒன்றை தனது கைப்பட எழுதி இருக்கிறார். அதில்,"கலாதபஸ்வி கே விஸ்வநாத் காரு அவர்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையையும் கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர். எனவே அவரது கலை அவரது வாழ்நாள் மற்றும் காலத்திற்கு அப்பாலும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. தீவிர ரசிகர், கமல்ஹாசன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read | பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் மரணம் : திரையுலகினர் இரங்கல்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan emotional tweet on actor Viswanath demise

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan emotional tweet, Viswanath demise will find this news story useful.