''அழுத்தமான ஆதாராங்களை சமர்பிக்காதது திட்டமிட்ட செயலா ?'' - நடிகர் கமல்ஹாசன் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து  பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி விடுதலையாகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 32 பேர் விடுதலையாகின்றனர். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பினரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan condemns Babri Masjid demolition case verdict | பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

People looking for online information on Babri Masjid, Kamal Haasan will find this news story useful.