BIGG BOSS ஃபினாலேவுல கவனம் ஈர்த்த கமலின் காஸ்ட்யூம்.. வைரல் பின்னணி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் என்றாலே அட்வான்ஸாக எதையும் செய்பவர் என்று ரசிகர்களால் பாராட்டப்படுபவர்.

Advertising
>
Advertising

Also Read | அட .. பிரபல நடிகரின் மகளா இவங்க?.. இளம் தமிழ் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம்.. VIRAL PICS !!

சின்னத்திரை உலகிற்கும், தான் இன்னும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அதுபோல இன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் & மாடல்களுக்கு கூட டஃப் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும், ஃபேஷன் உடைகளை அணிந்து வருவதையும் கமல்ஹாசனிடம் காண முடியும்.

இந்நிலையில் நடந்து முடிந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசன் ஃபினாலேவில் கமல்ஹாசன் அணிந்து வந்த ஆடை கவனத்தை ஏற்படுத்தியது. ஆம், இந்த பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அணிந்து வந்த உடை மிகவும் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த நிகழ்ச்சியின்போதே, “நாம் பேசும் கருத்துக்கள் இந்த ஜெனரேஷனை சென்றடைய வேண்டும் எனும்போது நாமும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இது மாதிரி எல்லாம் ஃபேஷனாக டிரஸ் அணிகிறேன்” என்று கலகலப்பாக கூறினார்.

கமல்ஹாசன் அணிந்த அந்த ஆடை உண்மையில் இளைஞர்கள் பலரையும் கவனிக்க வைத்தது என்று சொல்லலாம். இத்தனை வயதிலும் நடிகர் கமல்ஹாசன் இவ்வளவு ஸ்டைலாக உடை அணிந்து வருவது பற்றி பலரும் இணையதளத்தில் பேசி வந்தனர். இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் அணிந்து வந்த அந்த ஆடையை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நடிகராகவும் அரசியல் பிரபலமாகவும் இருந்து வரும் கமல்ஹாசன் அணிந்து வந்த அந்த ஆடை  ‘KH ஹவுஸ் ஆப் கதர்’ என்கிற கமல்ஹாசனின் கதர் ஆடையக நிறுவனம் தயாரித்துள்ளது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

Also Read | Azeem : பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கிக் கொடுத்த அசிம்.! குவியும் பாராட்டுகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan bigg boss grand finale stylish costume detail

People looking for online information on Kamal Haasan, KH House of khaddar bigg boss grand finale will find this news story useful.