DSP:டிஸ்சார்ஜ் ஆன அன்றே 'சந்தானம்' விஜய் சேதுபதிக்காக களமிறங்கிய கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

DSP படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்

Advertising
>
Advertising

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று காலை டிஸ்சார்ஜ்  ஆனார். டிஸ்சார்ஜ் ஆன அன்றே 'சந்தானம்'விஜய் சேதுபதிக்காக இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ‌‌.

இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன்." என பேசியுள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "தான் தற்போது நலமாக இருப்பதாகவும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது" என்றும் கூறினார்

DSP:டிஸ்சார்ஜ் ஆன அன்றே 'சந்தானம்' விஜய் சேதுபதிக்காக களமிறங்கிய கமல்ஹாசன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan attend DSP Trailer Launch with Vijay Sethupathi

People looking for online information on DSP, Kamal Haasan, Vijay Sethupathi, Vikram will find this news story useful.