உலக நாயனை வியக்க வைத்த நம்பிக்கை நாயகன்! நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் தங்களது மகனை வேலையை விட்டு வருமாறு உருக்கத்துடன் கூறும் பெற்றோரின் வேண்டுகோளை நிராகரித்து தனது பணியை தொடரும் இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை இவர் ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, தங்களது மகனுக்கு இந்த நோய் வந்து விடக்கூடாதே எனப் பதறிய பாண்டித்துரையின் பெற்றோர் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாண்டியின் தாய் பேசும் போது "பாண்டி இந்த வேலை உனக்கு வேண்டாம். நீ அவர்களை தொட்டுத் தூக்குவாயில்லையா. ஆகவே நீ தயவு செய்து சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் சென்று தங்கி விடு. அப்படி இல்லையென்றால் தயவு செய்து அவர்களிடம் எதுவும் சொல்லாமல் இங்கு வந்து விடு. உனக்கு என்னத் தேவையோ அதை கடன் வாங்கியாவது நான் செய்கிறேன்" என்கிறார்.

பாண்டித்துரையின் தந்தை பேசும் போது, "பாண்டி உனக்கு என்ன தேவையோ அதை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றி வைக்கிறேன். உனக்கு இந்த வேலை மட்டும் வேண்டாம்" என்கிறார். இதற்கு பதிலளித்துப் போசிய பாண்டி, "உங்களை மாதிரி எல்லோரும் அவரது மகன்களை அழைத்து விட்டால், யார் இந்த வேலையை செய்வார்கள்" எனக் கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த அவரது பெற்றோர்கள் "அவர்களை காப்பாற்ற நிறைய பேர் உள்ளனர். ஆனால் எங்களுக்கு நீ ஒருவன் தான் இருக்கிறாய்" என்று கதறுகின்றனர். ஆனாலும், துரை அவரை சமாதானம் செய்கிறார். இதனைக் கேட்ட அவரது பெற்றோர்கள் நீ கேட்கமாட்டாய் என்று உருக்கமாக பேசுகின்றனர். இவர்களது இந்த ஆடியோ உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட அனைவரும் பாண்டித்துரையின் தன்னலமற்ற சேவையை நெஞ்சுருக பாராட்டி வருகின்றனர்.  அவரது இந்தச் செயலை நடிகர் கமல் ஹாசன் மனதார வாழ்த்தி தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, ''108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள்.பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்?என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கட உள்'' என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan appreciates 108 Ambulance Driver

People looking for online information on Ambulance 108, Coronavirus, Covid 19, Kamal Haasan, Pandithurai will find this news story useful.