'மருதநாயகம்' வருமா? பிக் பாஸில் கமல் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவு திரைப்படமான ‘மருதநாயகம்’ திரைப்படம் குறித்து மாஸ்டர் சாண்டி எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

கமல்ஹாசனின் கனவு படமான ‘மருதநாயகம்’ திரைப்படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கினார். இசைஞானி இளையராஜா இசையில் நாசர், சத்யராஜ், பசுபதி உள்ளிடோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பல திரைப்படங்களில் நடித்தாலும், அவரது ரசிகர்கள் மத்தியில் ‘மருதநாயகம்’ திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்த கேள்வி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.

கடந்த வார டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் ஏற்றிருந்த நடிகர்களின் கதாபாத்திரங்களில் இருந்து கமல்ஹாசனிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினர். அதற்கு சம்மதித்த கமல் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் சங்கத்தில் ஏன் நிர்வாகியாக இருக்கக்கூடாது என சரவணன் கேட்டார். நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இல்லை என்றாலும், பல்வேறு செயல்பாடுகளில் தற்போதைய நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுவருகிறேன். அவர்கள் செய்லபடுவதற்காக நான் ஒதுங்கி நிற்கவில்லை, விலகி நிற்கிறேன் என்றார்.

அதை தொடர்ந்து சிம்புவாக பேசிய சாண்டி மருதநாயகம் படத்தின் நிலை குறித்து ஒரு ரசிகனாக கேள்வி கேட்டார். திரையுலகில் பலருக்கும் இருக்கும் அதே கேள்வியும், ஆர்வமும் சாண்டிக்கும் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த கேள்விக்கு சற்று சிந்தித்து பதில் கூறிய கமல், மருதநாயகம் படத்தை கொஞ்சம் தான் தன்னால் எடுக்க முடிந்தது. மீதி படத்தை எடுக்க தொழில்நுட்ப உதவியும், வணிக உதவியும் தேவைப்படுகிறது. முயற்சித்து வருகிறேன். வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். உங்களை போல் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்றார்.

தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும், அவரது மற்றொரு கனவு படமான ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற அரசியல் சார்ந்த திரைப்படத்திலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan about dream film Marudhanayagam in Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Tamil 3, Kamal Haasan, Marudhanayagam, Ravi K. Chandran will find this news story useful.