மாஸ் தான்.. ‘விக்ரம்’ படத்தில் இவர் ஒருத்தருக்கு ஜோடியாக 3 நடிகைகளா?. யார் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல் நடிக்கும் 'விக்ரம்' எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் தகவல் வெளியானது முதலே ரசிகர்களால் இந்த படத்தைக் காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை.  இந்த படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியுடன் 3 நடிகைகள் ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, விஜய் டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற மைனா நந்தினி, பிரபல விஜே மகேஸ்வரி மற்றும் பிரபல சீரியல் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ஷிவானியும் விஜய் சேதுபதியுடன் இணைவார்கள் என தெரிகிறது. 

Also Read: அழவைத்த சசி அம்மாவின் கதை.. கலங்க வைத்த Elimination! 'விஜய் சேதுபதி' தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் ..

இந்த படத்துககான படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மாஸ் தான்.. ‘விக்ரம்’ படத்தில் இவர் ஒருத்தருக்கு ஜோடியாக 3 நடிகைகளா?. யார் யார் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal fahadh fasil vikram movie 3 heroines for vijay sethupathi

People looking for online information on Fahadh Faasil, Kamal Haasan, Vijay Sethupathi will find this news story useful.