BIGG BOSS 6 TAMIL : "உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.!" - அசீமிடம் கொந்தளித்த கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், தற்போது சண்டை, விவாதம் என அனைத்தும் ஓய்ந்து மீண்டும் போட்டியாளர்கள் கலகலப்பாக இருக்க தொடங்கி உள்ளனர்.

Advertising
>
Advertising

முன்னதாக பொம்மை டாஸ்க் ஆரம்பித்த நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு தான் இருந்தனர்.

அதே வேளையில், போட்டியாளரான அசீம் தொடர்ந்து பல போட்டியாளர்களிடம் வாக்குவாதத்திலும், மாறி மாறி பாடி லாங்குவேஜ் கேலி செய்வது உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விட்டதாக அசீம் உறுதியாக கூறி வந்த நிலையில் இதுகுறித்து மற்ற போட்டியாளர்களிடம் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதே போல, பொம்மை டாஸ்க்கிற்கு பிறகு, வேறொரு பெண்ணை தள்ளி விட்டதாக தனலட்சுமியை குறிப்பிட்டு அவரை நாமினேட்டும் செய்திருந்தார் அசீம். இது தொடர்பான செயல்பாடுகள், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் பெற்றிருந்தது. தொடர்ந்து, பொம்மை டாஸ்க்கிற்கு பிறகு Worst Performer என்ற பெயரில், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோரை சிறை செல்லவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த வாரத்தில் அசீம் குறித்த பேச்சு தான் அதிகம் நிலவியும் வந்தது. இந்த நிலையில், வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன் ஷெரினாவை தனலட்சுமி தள்ளி விடவில்லை என்பதையும் உறுதி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அனைவரும் தனலட்சுமிக்கு ஆதரவாக கைதட்டி இருந்தனர். இதனால், அவரும் நெகிழ்ந்து போயிருந்தார்.

இதனையடுத்து, குறும்படத்திற்கு பிறகு அசீமிடம் பேசிய கமல், "நான் உங்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை. விமர்சிக்கப் போவதுமில்லை, நான் உங்களை கண்டிக்கிறேன். உங்கள் மகனுக்காக சரியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் அவருக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து அவரை நீங்கள் கெடுத்து விடுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல. உங்களைப் போல வெளியில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்கு தான் இந்த கோபம் உங்கள் மீது பர்சனலாக இல்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்பது தான் இதற்கு முடிவு." என்று சொன்னதும் அசிம் தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டார்.

இதேபோல் சிவின் கணேசனின் உடல் மொழியை கேலி பண்ணியதற்காக அவரிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லி கமல் வலியுறுத்தினார். அதன் பிறகு அவரிடமும் அசீம் மன்னிப்பு கேட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Condemns azeem in dhanalakshmi issue bigg boss 6 tamil

People looking for online information on Azeem, BIGGBOSS TAMIL, Kamal Haasan will find this news story useful.