கமல்ஹாசன் குறித்த கேள்வி! சுகாதார துறை செயலாளர் அளித்த பதில் இதுதான்! உண்மை நிலை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மாதம் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று வைரஸ்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

Advertising
>
Advertising

மேலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் தன்னுடைய ட்விட்டரில்  பக்கத்தில் உறுதிப்படுத்தினார். அதில்  “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என குறிப்பிட்டிருந்தார். சிகிச்சைக்காக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

(01.12.2021) அன்றுகமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்தது. அதில்"  நவம்பர் 22, 2021 அன்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு கோவிட் பாசிட்டிவ் இருந்தது. அவருக்கு லேசான கோவிட் இருந்தது, அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார், ஆனால் டிசம்பர் 3, 2021 வரை தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். டிசம்பர் 4, 2021 முதல் தனது வழக்கமான வேலையைத் தொடங்க அவர் தகுதியுடையவராக இருப்பார். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  (04.12.2021)  அன்று நடிகர் கமல்ஹாசன் தனது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.  தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்என்னுயிரே என்னுறவே என் தமிழே... மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அருமை நண்பர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் திரு நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும். ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள். 

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள். என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது, என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி உதவிய உள்ளங்களுக்கு நன்றி, எனக்காகக் கலங்கிய கண்களுக்கு நன்றி தொழுத கரங்களுக்கு நன்றி என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி. உங்கள் நான். கமல் ஹாசன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னையில் பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.  இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் 7 நாட்களும், அதன் பின் 7 நாட்கள் வீட்டிலும் 14 நாட்கள் சுயதனிமை படுத்திக்கொள்ள வேண்டும்” என அரசின் வழிகாட்டல் உள்ளது. ஆனால் வழிகாட்டலை மீறி கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, விசாரிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார். பொதுவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் 7நாட்களும், அதன் பின் 7நாட்கள் வீட்டில் என மொத்தம் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Bigg Boss shoot controversy after recover from corona

People looking for online information on Biggboss, Corona, Covid, Kamal Haasan will find this news story useful.