“எப்போதும் திருப்தி அடையாதீங்க… அதுதான் ரசிகர்களுக்கு…” சிஷ்யன் லோகேஷுக்கு கமல் ADVISE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ஆதரவு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Advertising
>
Advertising

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

லோகேஷ் நெகிழ்ச்சி

இந்நிலையில் விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவைக் குறிப்பிட்டு லோகேஷ் “நான் இதுபோல எப்போதும் உணர்ச்சிவசப்பட்டதில்லை. நீங்கள் விக்ரம் திரைப்படத்தின் மீதும் என் மீதும் காட்டிய அன்பு அளப்பரியது. இந்த அன்பு பதிலாக நான் உங்களுக்கு என்ன கொடுக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. நான் கமல் சாருக்கும் என்னுடைய அற்புதமான குழுவுக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். அனைவருக்கும் என் அன்பு” எனக் கூறியிருந்தார்.

கமல் அறிவுரை….

லோகேஷின் இந்த டிவீட்டிற்கு கமல் “அன்புக்குரிய பார்வையாளர்களுக்கு நீங்கள்  திருப்பி செய்யக்கூடிய ஒரே வழி, ஒருபோதும் மனநிறைவை அடையாமல் இருப்பதுதான். நேர்மையான முதுகை உடைக்கும் உழைப்பை மேற்கொள்ளுங்கள். ரசிகர்கள் அதை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். என்னுடைய ஆற்றல் ரசிகர்களின் அன்பினால் வருகிறது. உங்கள் முயற்சிகளுக்கு எல்லா சக்தியும் கிடைக்கட்டும். இந்த முறை நாங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் உங்களுக்கு கொடுத்த ஆதரவைப் போல எப்போதும் கொடுக்கும்.  Rock on.” என அறிவுரை வழங்கியுள்ளார்.
கமல் மற்றும் லோகேஷ் கனகராஜின் இந்த டிவீட்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகியுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal and lokesh viral tweets about vikram success

People looking for online information on Lokesh Kanagaraj will find this news story useful.