"செம்ம கெத்தா இன்னொரு பாட்டு".. துணிவு படத்தின் அடுத்த பாடல் குறித்து கல்யாண் மாஸ்டர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

Kalyan about Next Song from Thunivu after Chilla Chilla
Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Kalyan about Next Song from Thunivu after Chilla Chilla

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று  மாலை 6:30 வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

மேலும் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் துணிவு படம் குறித்தும் நடிகர் அஜித், இயக்குனர் வினோத் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் சில்லா சில்லா பாடலை அடுத்து துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடல் குறித்து கல்யாண் மாஸ்டர் பேசியுள்ளார். "செம்ம கெத்தா ஒரு பாடல் இருக்கு. அந்த பாடலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். வேறமாரி ஒன்று முயற்சி செய்றோம். அது நல்லா வந்துச்சுனா.. அப்போ நான் தான் ரொம்ப மகிழ்ச்சியான ஆளா இருப்பேன்" என கல்யாண் மாஸ்டர் பேசியுள்ளார்.

"செம்ம கெத்தா இன்னொரு பாட்டு".. துணிவு படத்தின் அடுத்த பாடல் குறித்து கல்யாண் மாஸ்டர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kalyan about Next Song from Thunivu after Chilla Chilla

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla, Kalyan Master, Thunivu will find this news story useful.