பிரபல OTT-க்கு கிருத்திகா உதயநிதி இயக்கப்போகும் புதிய வெப் - சீரிஸ்.. வெளியான தாறுமாறான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது 

Advertising
>
Advertising

ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது.

இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார்.

காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடரில் K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோருடன் G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து  நடிக்கின்றனர்.

இந்தத் தொடரின் தலைப்பை வெளியிட்ட நிகழ்வோடு  முத்தாய்ப்பாக   முதல் சிங்கிள் ட்ராக் ‘காலை மாலை’ பாடல் வெளியிடப்பட்டது. விவேக் வரிகளில் சித் ஸ்ரீராமின் குரலில், தரனின் மெல்லிசையில் மனதை வருடும்  இப்பாடல் உருவாகியுள்ளது. கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் பாடலின் காட்சிகள் இந்தப் பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இந்தத் தொடரில் தரன் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இது இந்த வெப் சீரிஸில் அதிகமான பாடல்கள் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. நடிகை ரம்யா நம்பீசன், அலெக்ஸாண்ட்ரா ஜாய், கேசவ் ராம், சோனி டாஃபோடில், சனா மொய்டுட்டி, ஷில்வா ஷரோன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ஹரிசரண் சேஷாத்ரி மற்றும் ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் பின்னணிப் பாடுகிறார்கள். விவேக் தவிர கு.கார்த்திக் மற்றும் மணி அமுதவன் இத்தொடரில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்

ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டிங்), சக்தி வெங்கட்ராஜ் M (கலை), சைமன் K கிங் (பின்னணி இசை), சுதேஷ் குமார் (ஸ்டண்ட்ஸ்), சந்துரு KR(சிஇஓ), செந்தில் குமரன் S (நிர்வாகத் தயாரிப்பாளர்), ரமீஸ் ராஜா . I (லைன் புரடியூசர்), தபஸ் நாயக் (சவுண்ட் எஃபெக்ட்ஸ் & மிக்சிங்), ஷேக் பாஷா (மேக்கப்), கவிதா J (காஸ்ட்யூம் டிசைனர்), வீரபாபு G (காஸ்ட்யூமர்), தீப்தி புஷ்பாலா (டப்பிங் இன்ஜினியர்), லீலாவதி (நடன அமைப்பு), சதீஷ் - AIM ( மக்கள் தொடர்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்),

கிருத்திகா உதயநிதி, அசோக். R (வசனம்), R.ஹரிஹர சுதன் / லார்வன் ஸ்டுடியோஸ் (VFX), ராஜ் குமார் R (கலரிஸ்ட்), மற்றும் வொயிட் லோட்டஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ (DI) ஆகியோர் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Kalidas Tanya starrer “Paper Rocket”  Web Series "ZEE5"

People looking for online information on Abishek, Chinni jayanth, Dheeraj, G.M. Kumar, Gouri G. Kishan, K. Renuka, Kaali Venkat, Kalidas, Kalidass Jeyaraman, Karunakaran, Kiruthika, Nagineedu, Nirmal Palazhi, OTT, Poornima Bhagyaraj, Priyadarshini, Tanya Ravichandran, V, Zee 5 will find this news story useful.