"இனிமேல் நான் சிங்கிள் இல்ல".. காதலியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில்  முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஜெயராம்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிக்பாஸ் கவின் நடித்த DADA .. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டவைரல் ட்வீட்..!

தமிழில் 'முறைமாமன்', 'பெரிய இடத்து மாப்பிள்ளை', 'பஞ்ச தந்திரம்', 'ஏகன்', 'துப்பாக்கி' ஆகிய படங்களில் ஜெயராம் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் ஜெயராம், மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே புகழ் பெற்றவர்.  தமிழில் 'மீன் குழம்பும் மண்பானையும்', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாவக் கதைகள், புத்தம் புது காலை ஆகிய ஆந்தாலஜியிலும், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.  மலையாளத்திலும் காளிதாஸ் ஜெயராம் பல படங்களில் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் விக்ரம் படத்தில் பிரபஞ்சன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.  மலையாளத்தில் ரஜினி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல்  தாரிணி காளிங்கராயருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "இறுதியாக காதலர் தினத்தில்  இனிமேல் நான் சிங்கிள் இல்லை". என பதிவிட்டுள்ளார்.

Also Read | ரெட்டை ஜடையில் ஸ்கூல் பொண்ணாக மாளவிகா மோகனன்.. வைரலாகும் கிறிஸ்டி படத்தின் நியூ லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

Kalidas Jayaram Valentines day Post about His Girlfriend

People looking for online information on Kalidas Jayaram, Kalidas Jayaram Valentines day Post will find this news story useful.