இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'.
Also Read | விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதபாத்திரம்… Mass போஸ்டரோடு வெளியான தகவல்
ஜூன் மாதம் 3 ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டிரைலர் மற்றும் பாடடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசன் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் மற்றும் பாடல்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவும் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், அன்பறிவ் ஆகியோர், ஸ்டாண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்துள்ளனர்.
காளிதாஸ் பிரத்யேக பேட்டி
விக்ரம் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், Behindwoods சேனலுக்கு நடிகர் காளிதாஸ், பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசிய காளிதாஸ், "கமல் சாரிடம் நான் அதிகம் நெருக்கமாக பழகியதோ, உரையாடியதோ இல்லை. விக்ரம் படத்திற்காக என்னிடம் லோகேஷ் கதை சொன்ன பிறகு, நான் நடிப்பது உறுதியான பின்னர், கமல் சார் என்னை நேரில் வரவழைத்து சுமார் ஒரு மணி நேரம் பேசி இருந்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. நண்பருடைய மகன் என்பதை தாண்டி, ஒரு சக நடிகராக தான் என்னிடம் அவர் பேசினார்" என்றார்.
முழு கதையும் சொன்ன லோகேஷ்
தொடர்ந்து பேசிய காளிதாஸ், "விக்ரம் படத்தில் நான் சிறிய கதாபாத்திரம் தான் செய்துள்ளேன். முன்னதாக, முழு கதையையும் லோகேஷ் எனக்கு Narrate செய்தார். நான் செய்வது சிறிய ரோலாக இருந்தாலும், ஆரம்பம் முதல் இறுதி வரை, படத்தின் கதையை எனக்கு அவர் விளக்கினார். முடித்து விட்டு, நீங்கள் நடிக்கிறீர்களா என்றும் கேட்டார். மூன்று பெரிய நட்சத்திரம் நடிக்கும் படத்தில் எப்படி வேண்டாம் என்று சொல்வது. சேது அண்ணாவுடன் சேர்ந்து சில காட்சிகளில் வருவேன். பகத்துடன் எனக்கு காட்சி இல்லை" என பேசினார்.
தொடர்ந்து, பஞ்சதந்திரம் படத்தில் தந்தை ஜெயராம் பேசிய வசனங்கள் குறித்தும் காளிதாஸ் சில சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளியை பார்த்த கமல்ஹாசன், இது தொடர்பாக தன்னிடம் பேசிய விஷயங்களையும் காளிதாஸ் பகிர்ந்து கொண்டார்.
மின்னல் முரளி பாத்துட்டு..
"மின்னல் முரளி பார்த்து விட்டு, என்னிடம் பேசிக் கொண்டிருந்த கமல் சார், பல ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை தயார் செய்து, அதனை இயக்கும் பிளானில் இருந்ததாக என்னிடம் கூறினார். அந்த கதையை என்னிடம் கூறவும் செய்தார். அந்த காலத்திலேயே சூப்பர் ஹீரோ கதை உருவாக்கியதை எண்ணி நான் வியப்பானேன். அதே போல,எனக்கு ஒரு வருத்தம் உள்ளது. கமல் சார் செய்யும் அனைத்து படைப்புகளும், பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் கொண்டாடப்படுகிறது. ஒரு கலைஞருக்கு உடனடியாக அவரின் படைப்புகளுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்" என காளிதாஸ் கூறினார்.
இது தொடர்பான முழு வீடியோவைக் காண: