இயக்குநராக துடிக்கும் இளைஞர்களுக்காக வெற்றிமாறனின் புதிய முயற்சி… குவியும் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Advertising
>
Advertising

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் " நாம் அறக்கட்டளையின் சார்பாக திரை - பண்பாடு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி…

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து  அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில்  பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .

ஒரு கோடி நன்கொடையும் இயக்குனர் வாய்ப்பும்…

இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S  தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்  மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது  V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் . ”நாம் அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர்  ஃபாதர் ராஜாநாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .

வெற்றிமாறன் தாணு கூட்டணி…


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தாணு தயாரித்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து இருவரும் விரைவில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்துக்காக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Kalaipuli dhanu gave one crore rupees to vetrimaaran foundation

People looking for online information on Dhanu, Vetrimaaran will find this news story useful.