காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் மணிகண்டன்.

Also Read | தளபதி 67 படத்தில் இணையும் பிரபல நடிகை? வைரலாகும் ட்விட்டர் பதிவு!
இந்த படத்திற்கு பிறகு, வித்தார்த் நடிப்பில் குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கினார். இவரது அனைத்து படங்களும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் இயக்குனர் மணிகண்டன் கடைசி விவசாயி படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்கிற முதியவர் நடித்தார். இந்த திரைப்படத்தில் இந்த முதியவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹார்வி இசையமைத்தனர்.
கடந்த பிப்வரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. குறிப்பாக கடைசி விவசாயி பட இயக்குனர் எம்.மணிகண்டனை அவரது ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்த மிஷ்கின், மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த மணிகண்டனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தினார்.
இந்நிலையில் இயக்குனர் மணிகண்டனுடன் விஜய் சேதுபதி புதிய படத்தில் இணைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய் சேதுபதி, ஜவான், மும்பைக்கர், மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
Also Read | ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானாம்! அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!