தனது கணவரின் பிறந்தநாள்.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டு கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "சர்தார்" படத்தின் புதிய போஸ்டர்... வயதான கார்த்தி லுக் சும்மா மிரட்டுதே! பக்கா மாஸ்

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது. அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புதிய புகைப்படத்தை "இந்த உலகின் சிறந்த தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கணவர் கௌதம் கிட்சுலுவுக்கு முத்தம் கொடுத்தது போலவும் குழந்தை கௌதமின் மடியில் படுத்து இருப்பது போலவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Also Read | PONNIYIN SELVAN PS1: முதல்முறையாக தமிழ் சினிமாவில்.. "பொன்னியின் செல்வன்" தரவிருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal with her son Neil Latest Photo

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal with her son, Kajal Aggarwal with her son Latest photos will find this news story useful.