திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைக்குழந்தையுடன் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

images are subject to © copyright to their respective owners

தமிழில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் அண்மையில்  'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

images are subject to © copyright to their respective owners

குழந்தை பிறந்து ஒன்பது மாதம் கடந்த நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு வெளியே வந்த காஜல் அகர்வால் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அழுத  குழந்தையை தாலாட்டினார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal With Her Son Neil Kitchlu at Tirupati Temple

People looking for online information on Indian 2, Kajal Aggarwal, Neil, Tirupati will find this news story useful.