கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி தனது 4 மாத குழந்தையின் CUTE போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும்  புகைப்படத்தை வெளியிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. வெளியான கலர்ஃபுல் டிரெய்லர்!

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா, தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது. அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் முதல் முறையாக வெளியிட்டு இருந்தார். அவ்வப்போது குழந்தையின் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் காஜல் அகர்வால்.

இந்நிலையில் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மாத குழந்தையின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி உள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையை மடியில் வைத்து தாலாட்டுவது  போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Also Read | பிரபல OTT-க்காக தமன்னா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. போட்டோவுடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal wishes Krishna Jayanti With her son picture

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal wishes Krishna Jayanti will find this news story useful.