'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'உடுமலை' கெளசல்யாவின் புதிய கடை.. திறந்து வைத்த பிரபல முன்னணி ஹீரோயின்!

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா, தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலை விட்டு வெளியே வரும் போது கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டபடி வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காஜல் அகர்வாலுக்கு பட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக திருப்பதி வந்த காஜல் அகர்வால் அங்கு கூடியிருந்த ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்து கொண்டார்.

Also Read | அசத்தலான புதிய ஆக்சன் காட்சிகளுடன் 'பொன்னியின் செல்வன்'.. வெளியான சூப்பர் GLIMPSE வீடியோ!

'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal visit Thirupathi Temple with her husband

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal visit Thirupathi Temple, Thirupathi Temple will find this news story useful.