இந்தியன் 2 படப்பிடிப்பு.. மேக்கப் மாஸ்க் போட்டு களமிறங்கிய காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

Advertising
>
Advertising

Also Read | போடு வெடிய..அஜித் நடிக்கும் 'துணிவு'.. இந்தா வந்துருச்சுல அடுத்த தெறியான 2-வது லுக் போஸ்டர்!

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இந்தியன் 2 படம் மீண்டும் துவங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன என்று கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி உள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார். காஜல் அகர்வால்,  ஆன்மீக பாடலுடன் முகத்தில் மேக்கப் மாஸ்க் அணிந்து கொண்டு காரில் பயணம் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தியன் 2 படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொள்வது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தொழிலதிபர் கெளதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், காஜல் - கெளதம் தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மேலும் தங்களின் குழந்தைக்கு 'நெய்ல் கிட்ஸ்லு' என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.. மாஸ் லுக்கில் களமிறங்கிய கமல்ஹாசன்! சூப்பர் BTS

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal joined Indian 2 Movie Shooting

People looking for online information on Indian 2, Indian 2 Movie Shooting Updates, Kajal Aggarwal, Kamal Haasan will find this news story useful.