சென்னை: நடிகை காஜல் அகர்வால் துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்றுள்ளார்.
நயன்தாரா இல்லாம தான் டூர் போனும் போல.. விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.
சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.
திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் துபாய் அரசின் மிகப்பெரிய கொரவமான கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட துறைகளில் சாதிக்கும் நபர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் அமீரகத்தின் பிரதமரும் துபாய் எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோல்டன் விசாவை அறிமுகம் செய்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
'வலிமை' படம் பார்த்த பாலிவுட் பிரபலம்... படம் குறித்து சொன்ன மிரட்டலான விமர்சனம்!