சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.
பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது.
பின் காஜல் அகர்வால், நிறைமாத கர்ப்பத்துடன் ராஜஸ்தானில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. நீச்சல் உடையில் காஜல் அகர்வால் இருக்கும் புகைப்படமும், ராஜஸ்தான் ஓட்டலின் தோட்டப்பாதையில் நடந்து செல்லும் புகைப்படமும் வெளியாகின. ஜெய்ப்பூர் அருகே ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள அமன்பாஹ் ஹோட்டலில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் நிறைமாத வயிற்றுடன் காஜல் அகர்வால் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.