தைவான் நாட்டில் கணவர் & மகனுடன் காஜல் அகர்வால்.. செம்ம வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தனது குடும்பத்துடன் தைவான் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மொத்த குடும்பமும் இங்கே தான் இருக்காங்க.. ரன்பீர் - ஆலியா பட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 😍

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால்,  நடிகர்கள் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல். சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா. தனுஷ் உடன் மாரி, ஜெயம் ரவி உடன் கோமாளி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து எட்டு மாதம் கடந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையின்  புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் தைவான் நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தும் கூறியுள்ளார். ‌ஷாப்பிங் மாலில் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் வாரிசு இசை வெளியீட்டு விழா.. எப்போ? வைரல் ப்ரோமோ வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Christmas Celebration with Her family in Taiwan

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal Christmas Celebration, Taiwan will find this news story useful.