காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறுடன் வெளியிட்ட LATEST வைரல் புகைப்படங்கள்! ரசிகர்கள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

BREAKING: BEAST பட அரபிக்குத்து பாட்டுல இந்த விஷயம் இருக்காமா? அப்போ பாட்டு வேற லெவல் தான்!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றுள்ளது.

திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார்.

இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

BREAKING: வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய சிம்பு! இது கொல மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal Baby bump photo went viral on instagram

People looking for online information on காஜல் அகர்வால், Kajal, Kajal Aggarwal, Kajal Baby Bump will find this news story useful.